Jothidam

 நற்றுணையாவதும் நம்முடன் இருப்பதும் 

ந ம சி வ ய வே.. 

நடப்பதெல்லாம் நாராயணன் செயலே...

    💐 சனிப்பெயர்ச்சி அடைந்து விட்டார்.. 12 இராசிகளுக்கும் ஜோதிடர்கள் பல்வேறு பலன்களை மற்ற கிரஹங்களின் இடத்தைப் பொருத்து பலன் கூறியிருப்பார்கள்.. இனி செய்வதென்ன?

        💐 ஜோதிடம் "வேதத்தின் கண்" என குறிப்பிடப்படுகிறது.. 

               இறைவனின் பேரருளே "கண்ணிற்கு" ஒளி கொடுக்கிறது.. கண் இருந்தால் போதுமா? பொருளைப்பார்க்க "ஒளி" வேண்டும்.. அந்த ஒளியை  இறைவன் அளித்தால் மட்டுமே பொருளைக் காண முடியும்.. 

           இதன் மூலம் உணர்வது யாதெனில் இறைவனின் திருவடிகளைப்பற்றிய அன்பர்களுக்கு... அவனின் பெருங்கருணை துணையாகவும் தோணியாகவும் இருக்கும்... கவலை வேண்டாம்..

             ஶ்ரீசிவன் பக்தர்கள்... சீர்காழி திருஞானசம்பந்தர் அருளிய "கோளாறு திருப்பதிகத்தினை" பாராயணம் செய்யவும்.. எல்லா பாடல்களும் "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே" .... என்றே நிறைவுபெறும்.. "வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன்" எனத்தொடங்கும் முதல் பாடலையாவது மனனம் செய்து மனதால் உச்சரிக்க நவகோள்களால் நன்மையே விளையும்.. கவலை வேண்டாம்...

            ஶ்ரீவிஷ்ணு பக்தர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள "கெடுமிடராய கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்" எனத்தொடங்கும் பாடலை மனனம் செய்து மனதார உச்சரித்து ஶ்ரீமகாவிஷ்ணுவின் பேரருளால் நவக்கிரங்களை நன்மை செய்யும் கிரஹங்களாக மாற்றிட வேண்டி பெருமாளை பிரார்த்தனை செய்யங்கள்...

     அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்ற கொள்கையில் திடமாக இருந்து.. ஶ்ரீசனீச்வரன் இடப்பெயர்ச்சியால் மனச்சோர்வு அடையாமல் அந்தப் பெயர்ச்சியும் நன்மையே செய்யும் என்ற நம்பிக்கையில் இறைவனின் திருவடிகளை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்..

இனியெல்லாம் சுகமே.. சுபமே...

     உல ஷேமத்திற்காக உங்களுடன் சேர்ந்து நானும் பிராத்தித்து மகிழ்கிறேன் அன்புடன் சிவஸ்ரீ இராஜகணபதி ஸ்ரீ வாராஹி அம்மன் சித்தர் பீடம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Sivan temples