Sivan temples
திருவனைக்காவல்
இறைவர் : செழுநீர்த்தீரள்நாதர்,
ஜம்புகேசுவரர்
இறைவியார் : அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி
தல மரம் : வெண்நாவல்
தீர்த்தம் : காவிரி, இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம்.
தேவாரப் பாடல்கள் :
1. சம்பந்தர்
1. மழையார் மிடறா,
2. வானைக்காவில் வெண்மதி,
3. மண்ணது வுண்டரி (கூடற்சதுக்கம்).
2. அப்பர்
1. கோனைக் காவிக்,
2. எத்தாயர் எத்தந்தை,
3. முன்னானைத் தோல்
3. சுந்தரர் - மறைகள் ஆயின
ஆலயம் திறக்கும் நேரம்
காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலயம் செல்லும் வழி
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 km தொலைவில் உள்ளது .இக்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் உத்தமர் கோயில் உள்ளது
திருவானைக்கா ஜம்புகேசுவரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.
தேவார பாடல் பெற்ற வடகரை தலங்களில் 60 வது தலம்.தேவார தலங்கள் 274 தலங்களில் 60 வது தலமாகும் .
பஞ்ச பூத தலங்களில் இத்தலம் நீர் தலம். 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம்.
ஐந்து பிரகாரங்களை கொண்டது இந்த ஆலயம், ஆலயத்தின் மேற்கு கோபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டியது. கிழக்கு கோபுரம் சுந்தரபாண்டியன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. கிபி 13 ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தொடங்க ஹெய்சால அரசன் வீரசோமேஸ்வரன் கட்டி முடித்திருக்கிறார். மிக அதிகமான கலை நுணுக்கங்கள் கொண்ட சிற்ப கோபுரம் இது. 4 வது பிரகார மதிலுக்கு `திருநீறிட்டான் மதில்’ என்றும், 5 வது சுற்றிக்கு விபூதி சுற்று என்றும் பெயர். இந்த விபூதி சுற்று கட்டும்போது இறைவனே நேரடியாக சித்தர் வடிவில் வந்து வேலை வாங்கியதாகவும் வேலை செய்தவர்களுக்கு கூலியாக விபூதி பைகளை கொடுத்ததாகவும் அவர்கள் அதை திறந்த பார்த்தபோது அவரவர் செய்த வேலைக்கு தகுந்தார்போல் காசுகள் கிட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே ஆச்சுவருக்கு விபூதி சுற்று என்று பெயர் ஏற்பட்டது.
மூலஸ்தானத்தில் சதுரபீட ஆவுடையரில் ஜம்புலிங்கேஸ்வரர் அருள்பலிக்கிறார். கருவறைக்கு முன்னாள் நவத்வாரங்கள் கொண்ட ஒரு ஜன்னல் உள்ளது. இதற்கு `திருசாலகம்’ என்று பெயர். அதன்வழியே இறைவனை தரிசித்தால் ஒன்பது துவாரங்களை கொண்ட மனித சரீரம் நோயின்றி வாழும் என்று ஐதீகம். இந்த சாலக தரிசனம் மிகவும் விசேஷமானது. மூலவர் சன்னதிக்கீழே தரை மட்டத்திற்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இதன்வழியே இறங்கினால் ஜம்புலிங்கேஸ்வரரை தரிசிக்கலாம். இதை யானை புகமுடியாத மாட கோயிலாக அமைத்தார் செங்கட் சோழ நாயனார். கருவறை பின்புறம் ஸ்தலவிருச்சம் உள்ளது. இங்கே ஓங்காரவிநாயகரை தரிசிக்கலாம்.
திருவானைக்கா அன்னை அகிலாண்டேசுவரியின் ஆட்சித் தலம். அகிலாண்டேசுவரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.
அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிட்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிட்டை செய்துள்ளனர்
அகிலாண்ட நாயகி பூஜை செய்த அப்புலிங்கேஸ்வரர் என்பதால் லிங்கத்திலிருந்து என்றும் வற்றாமல் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது. இதனால் கற்பகிரஹம் என்றும் ஈரமாகவே இருக்கும்.
விடியல் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேசுவரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு, யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்
மூன்றாம் பிரகாரத்தில் பிரம்மா,விஷ்ணு ,சிவன் மூவரும் ஒருங்கிணைந்த ஏக பாத மூர்த்தி சிற்பத்தை தரிசிக்கலாம் .குறத்தி மண்டபத்தில் நடன மங்கையர் மற்றும் குறி சொல்லும் குறத்தி போன்ற சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன .அம்மன் சன்னதியின் பின்புறம் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தூணில் தொந்தியில்லாத ,புலி காலுடன் கூடிய வியாக்ர விநாயகரை தரிசிக்கிலாம் .இங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ரிஷபகுஞ்சர சிற்பம் விசேஷமானது .காளையை காணும்போது யானையும் ,யானையை காணும்போது காளையும் தெரியாது .மற்றும் வீணை இல்லாத சரஸ்வதி ,மேதா தட்சணாமூர்த்தி ,பஞ்சமுக விநாயகர் ஆகியவர்களும் இவ் தலத்தின் சிறப்புவாய்ந்தவர்கள் .
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது ,அங்கே இருந்த ஒரு வெண் நாவல் மரத்தின் கீழ் ஒரு சிவன் லிங்கம் இருந்தது .சிவகணங்களில் இருவர் தங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும் ,சிலந்தியாகவும் பிறந்தனர் .சிவலிங்கத்திற்கு கூரை இல்லாமல் வெறும் மரத்தின் கீழ் இருந்ததை கண்டு சிலந்தி சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையை பின்னி வெயிலில் இருந்தும் மழைகளிலிருந்தும் காத்தது,யானை காவேரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரை எடுத்துவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் .யானை சிலந்தி வலையை அசிங்கமாக நினைத்து அதை கிழித்துவிடும் ,சிலந்தி திரும்ப திரும்ப வலை கட்ட யானை அதை அழித்துக்கொண்டே இருந்தது ,யானையை தண்டிக்க நினைத்த சிலந்தி யானையின் தும்பிக்கையில் புகுந்துவிட்டது இரண்டும் போராட கடைசியில் மடிந்தன .இவைகளின் சிவபக்தியை மெச்சிய இறைவன் யானையை சிவககனங்களுக்கு தலைவனாக ஆக்கினார் .
சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட்சோழன் என்ற அரசனாக பிறந்து ,பூர்வ ஜென்ம ஞாபகத்தால் சோழன் யானை ஏறமுடியாதபடி குறுகலான படிகளை கொண்ட கட்டுமலைமீது சிவனை பிரதிஷ்டை செய்து 70 கோயில்களை கட்டினான் ,அவைகள் யாவும் ‘மாடக்கோவில் ‘ என்று அழைக்கப்படுகிறது .கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாட கோயில் இதுவாகும் . இவருடைய திருவுருவ சிலை நடராஜர் சன்னதியின் முன் உள்ளது .
இவரும் 63 நாயன்மார்களில் ஒருவராவார் .இவர் செங்கட் சோழ நாயனார் என்று அழைக்கப்பட்டார் . இத்தலம் இவருடைய அவதார தலமாகும் .
ஜம்புகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் நின்ற நிலையில் விஸ்வரூப மகாலட்சுமியும் ,இரண்டு தேவியருடன் சந்திரனையும் ,இரண்டு நந்தி தேவர்களையும் தரிசிக்கிலாம் .
இங்கு எழுந்தருளியுள்ள சனி பகவான் ,பால சனியாக குதிரை முகத்துடன் அன்னை சாயா தேவி மற்றும் மனைவியுடன் காட்சி தருகிறார் .
நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட் சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது.
20 கோஷ்ட தேவதைகள் கொண்ட சிவன் சந்நிதி உள்ளது இந்த தலம் ஒன்றில்தான் .
அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாக ,உச்சி காலத்தில் பார்வதியாகவும் ,மாலையில் சரஸ்வதியாகவும் நிகழ்வதால் மூன்று வண்ண உடை அலங்காரத்தில் காட்சிதருகிறார் .
அகிலாண்டேஸ்வரியின் அருள்பெற்ற மடப்பள்ளியில் பணியாற்றிய சிப்பந்தியே கவி காளமேகமாக பெயரும் புகழும் பெற்றார். திருஆனைக்கா உலா மற்றும் தனிப்பாடல்கள் பலவும் பாடி உள்ளார்
மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான்
கோட்செங்கச் சோழ நாயனார் அவதாரப் பதியாகும்.
அவதாரத் தலம் : திருஆனைக்கா.
வழிபாடு : லிங்க வழிபாடு.
முத்தித் தலம் : தில்லை (சிதம்பரம்).
குருபூசை நாள் : மாசி - சதயம்
திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்
கருத்துகள்
கருத்துரையிடுக