மார்கழி மாதம் சிறப்பு மகிமை
*🙏மார்கழி மாதத்தின் சிறப்புகள்* *'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்'* என ஶ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார். மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும். (பீடு=பெருமை) இம் மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர். தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும். அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம். எனவே மார்கழி என்பது தேவர்களுக்கு வைகறை பொழுதைப் போன்றது. மிகவும் சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு உகந்தது. தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத் 'தனுர் மாதம்" எனவும் அழைப்பர். இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது மக்களின் வழக்கம். ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்ற...